Blog

''மகன் தப்பானவனா என்று அம்மாவுக்குத்தான் முதலில் தெரியும்!’’ சைக்காட்ரிஸ்ட் கண்ணன் #GoodParenting

"``பாலுணர்ச்சி என்பது சமுதாயம் பெருகுவதற்கான ஒரு பயாலஜிகல் உந்துதல். ஆண்களுக்கு உடல்ரீதியான கவர்ச்சியும் பெண்களைப் பற்றிய கற்பனைகளுமே பாலுணர்ச்சியைத் தூண்டி விட போதுமானவை. ஆனால், சக மனுஷியான பெண்களிடம் இப்படி நடந்துகொள்வது சரி, இப்படி நடந்துகொள்வது தவறு என்று புரிந்து கொள்வதற்கு நமக்கென்று ஓர் அறிவு இருக்கிறதல்லவா?’’ என்று காட்டமாகக் கேள்வியெழுப்பியபடி பேச ஆரம்பித்தார்.

The Mind Space Clinic

`10 - 14 வயதுக்குள் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் ஒரு சிறுவன் ஆணாக மாற ஆரம்பிப்பான். பாலுணர்ச்சி என்பது அவனுடைய 12 - 16 வயதுக்குள் ஆரம்பமாகும். சிறு வயதிலேயே பாலுணர்ச்சியைத் தூண்டுகிற மாதிரியான சம்பவங்களை, அசாதாரணமான பாலுணர்ச்சி செய்கைகளைப் பார்த்து வளர்ந்த சிறுவர்களுக்கு, பாலுணர்ச்சி வர வேண்டிய வயதுக்கு முன்னாடியே வந்துவிடலாம்.

குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா... யாருக்கு சந்தோஷம்? ஆய்வு முடிவு!

"குழந்தை வளர்ப்பின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அப்பாக்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல், குழந்தை வளர்ப்பில் பங்கு பெறுபவர்களாகவும் இருந்தால், அம்மாக்களின் பளு குறையும்."

The Mind Space Clinic

குட்டீஸ்களுடன் இருக்கும்போது அம்மாக்களைவிட அப்பாக்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள். கலிஃபோர்னியா பல்கலைக்கழத்தின் சமீபத்திய ஆராய்ச்சி இதைச் சொல்லியிருக்கிறது. அப்பா என்றாலே கண்டிப்பு, தண்டிப்பு என்றிருந்த காலம் தற்போது இல்லைதான். பெருவாரியான வீடுகளில் ஒரு குழந்தைதான் என்பதால், அப்பாக்களின் ரோலே இன்றைக்கு கண்டிப்பில் இருந்து ஃப்ரெண்ட்லிக்கு மாறி விட்டது. சரி, அந்த ஆராய்ச்சியின் முழு விவரம் என்ன, அம்மாக்களைவிட அப்பாக்கள் அதிகம் ஆனந்தப்படுவதன் பின்னணி என்ன என்று தெரிந்துகொள்ள சைக்யாட்ரிஸ்ட் கண்ணனிடம் பேசினோம்.

''இந்திய திருமணங்களின் சக்ஸஸ் சீக்ரெட் என்ன?'' வெளிநாட்டு ஆராய்ச்சி முடிவு

தாம்பத்தியம் என்னும் ஒற்றை வார்த்தை தம்பதியரைப் பொறுத்து மாறிக் கொண்டே இருக்கிறது. சில தாம்பத்தியங்களை ஒத்தக் கருத்துகளே வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் தாம்பத்தியம் எதிர் எதிர் துருவங்களின் ஈர்ப்பால் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில், எது நீடித்த தாம்பத்தியத்துக்கு சரியானதாக இருக்கும் என்றொரு ஆராய்ச்சி மெக்சிகனில் நடத்தப்பட்டது. திருமணமாகிக் கிட்டத்தட்ட 20 வருடங்களான, ஒத்தக் கருத்துகள் கொண்ட 2,500 தம்பதிகளிடம் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. செய்தவர் ஆராய்ச்சியாளர் பில் சோப்பிக்.

The Mind Space Clinic

ஆராய்ச்சியின் முடிவில் பில், ''இதுநாள் வரை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர், நம்முடன் எல்லா வகையிலும் ஒத்துப் போகிறவராக இருந்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி நினைத்து திருமணப் பந்தத்தில் இணைந்தவர்கள்கூட, மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், ஒத்த விருப்பு, வெறுப்புகள் இல்லை. தம்பதியரில் ஒருவரோ அல்லது இரண்டு பேருமோ, அந்தப் பந்தத்துக்கு உண்மையானவர்களாக இருப்பது, சூழ்நிலைகளை அனுசரித்துச் செல்வது, வாழ்க்கைத் துணைக்கு மதிப்புத் தருவது, துணையின் கருத்துகளுக்கு செவி கொடுப்பது போன்ற இயல்புகளைக் கொண்டிருந்தால்தான் அவர்களின் தாம்பத்தியம் அதன் இறுதிக்காலம் வரை இணைபிரியாமல் இருக்கும். டேட்டிங் ஆப்பில் ஒத்தக் கருத்துகளைக் கொண்டவர்களைத் தேடி இணைவதால் எல்லாம், ஒரு திருமண வாழ்க்கை அதன் கடைசி நிமிடம் வரை மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது'' என்றிருக்கிறார்.

துரு துரு எல்லாம் ஹைபெராக்ட்டிவ் இல்லை!

சிறு வயதில் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவது இயல்பானதே. அதிலும் முதன்முறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் வகுப்பில்... சிறு வயதில் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவது இயல்பானதே. அதிலும் முதன்முறையாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் வகுப்பில் சுமார் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் துரு துரு வென்று ஓரிடத்தில் அமராமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

The Mind Space Clinic

பல குழந்தைகளை கையாளும் ஆசிரியருக்கோ அல்லது அவரின் உதவியாளருக்கோ அவ்வளவு ஏன் சில சமயங்களில் நமக்கே கூட இவர்கள் ஹைப்பர் ஆக்ட்டிவ் குழந்தைகளோ என்ற சந்தேகம் எழும். இந்த கணிப்பு சரியா?